தகவல் அறியும் சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


தகவல் அறியும் சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

தகவல் அறியும் சட்டமூலம் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்கவால் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான விவாதம் நாளைய தினம் ஆரம்பமாகும் எனவும், இந்த சட்டமூலத்தை அமுலாக்க பிரதமரும், சபாநாயகரும் பெரிதும் பாடுபடுவதாகவும் அவர் கூறினார்.

பிரதமருடைய பிறந்த நாளான இன்று இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.