தகுதியுடைய தமிழர்களும் அரச உத்தியோகத்தை பெற்றுக் கொள்வதில் பாரபட்சம்!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


தகுதியுடைய தமிழர்களும் அரச உத்தியோகத்தை பெற்றுக் கொள்வதில் பாரபட்சம்!

தகுதியுடைய தமிழர்களுக்கு அரசாங்க உத்தியோகங்களை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களுக்கும், சிங்களத் தலைவர்கள் சிங்களவர்களுக்கும் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கின்றனர்.

அத்துடன், அதிகாரத்திலுள்ள குறைந்தளவான தமிழர்களே சில தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதாகவும், தகுதியான தமிழர்களுக்கு அரச பணிகளைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான பாராபட்சங்கள் பற்றி இலங்கையில் நீண்டகாலமாக முறைப்பாடுள்ளது, எனினும் அதில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.