தங்கம் விலை இன்று இலங்கை – Sri Lanka Gold Price today – உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 665,680 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்கத்தின் விலை இன்று இலங்கை சந்தை நிலவரப்படி கடந்த இரு தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சிறு சரிவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி தங்கம் விலை இன்று இலங்கை சந்தையில், 24 கரட் தங்க பவுன் ஒன்று 187,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க பவுன் ஒன்று 172,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 164,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போயுள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.
புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.