தங்கம் விலை என்ன இன்று? தங்கம் என்று குழந்தைகளை கொஞ்சும்போது கூட நம்மவர்கள் கூறுவார்கள். அந்தளவுக்கு நம்மவர்களுக்கு பிடித்தமான விலை உயர்ந்த உலோகம் எனலாம்.
அப்படிப்பட்ட தங்கத்தின் விலை நிலவரம் நடப்பு ஆண்டில் எப்படியிருந்தது? விலை அதிகரித்திருந்ததா? தற்போது குறைந்துள்ளதா? நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொடலாம் என கூறியிருந்தனர்.
எனினும் இதுவரையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இதற்கிடையில் சர்வதேச சந்தையில் எப்படி இருந்தது.
இனியும் நிபுணர்கள் சொல்வதனைப் போல் நீண்டகால நோக்கில் அதிகரிக்கத்தான் செய்யுமா? அதிகபட்ச விலை என்ன? குறைந்தபட்ச விலை எவ்வளவு? அடுத்து என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை. முந்தைய ஆண்டில் கொரோனாவின் காரணமாக தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தினை தொட்டது.
Today Tamil News in Sri Lanka
நடப்பு ஆண்டில் இந்த உச்சத்தினை உடைக்கலாம் என நிபுணர்கள் கணித்தனர். ஆனால் நடப்பு ஆண்டில் அப்படி ஏதும் இல்லை. மாறாக முதல் கட்ட கொரோனா பரவலை காட்டிலும் இரண்டாம் கட்ட பரவலின்போது அதிக தாக்கம் இருந்தது.
எனினும் 2020ம் ஆண்டினை காட்டிலும் நடப்பு ஆண்டில் பெரியளவிலான தாக்கம் தங்கத்தில் இல்லை எனலாம். 2020 ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வரலாற்று உச்சத்தினை எட்டியது. எனினும் அதன் பிறகு அந்த உச்சத்தினை மீண்டும் இதுவரையில் உடைக்கவில்லை எனலாம்.
சொல்லப்போனால் அதன் பிறகு நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1979.9 டாலர்கள் வரையில் அதிகபட்சமாக தொட்டது.
ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் நடப்பு ஆண்டின் முதல் வர்த்தக நாளில் 1934.7 டாலர்களாக தொடங்கிய நிலையிக், ஜனவரி மாதத்திலேயே 1979.9 டாலர்களை தொட்டது.
எனினும் தொடர்ந்து மேலாகவே இருந்து வந்த தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1680 டாலர்களை தொட்டது.
எனினும் தங்கம் விலை என்ன இன்று என பார்த்தால், தற்போதைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1790 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போதைய நிலவரப்படி பார்க்கும்போது 144 டாலர்களுக்கும் மேல் சரிவில் தான் காணப்படுகின்றது.
தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் கொரோனா, பணவீக்கம், பொருளாதார சரிவு, ஒமிக்ரான் அச்சம், வட்டி விகிதம் சரிவு, அமெரிக்கா சீனா பதற்றம், டாலர் மதிப்பு, ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகளும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.