மாத்தறை இளைஞன் தண்டவாளத்தில் கழுத்தை வைத்து தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியானது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மாத்தறை இளைஞன் தண்டவாளத்தில் கழுத்தை வைத்து தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியானது

மாத்தறை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று காலை இளைஞர் ஒருவர் ரயில் வரும் போது தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

மாத்தறை – காலிதாச பகுதியில் நேற்று காலை மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், தண்டவாளத்திற்கு அருகில் கையடக்க தொலைபேசியில் உரையாடியவாறு திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குறித்த இளைஞனி தற்கொலை தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

அதில், “எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது… எனது வாழ்க்கையின் இறுதி நாள் இன்றாகும்” என பேஸ்புகில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

மேலும், தனது நண்பனுக்கு ரயில் பாதையில் எடுத்த செல்பியை அனுப்பியுள்ளார். அதில் “நான் இறந்ததை அறிந்தவுடன் பேஸ்புகில் பதிவு ஒன்றை போடவும்” என குறிப்பிட்டுள்ளார்.

கேக் வாங்குவதற்காக மாத்தறை பகுதிக்கு வந்த குறித்த இளைஞன் காதலில் ஏற்பட்ட மனவிரக்தி காரணமாகவே ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.