தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்குவதில் அரசு தோல்வி – சிவாஜிலிங்கம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்குவதில் அரசு தோல்வி – சிவாஜிலிங்கம்

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்குவதில் தற்போதுள்ள அரசாங்கம் இதுவரையில் தோல்வியடைந்துள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் இம்மாதம் 25ம் திகதி கொழும்பில் கலந்துரையால் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(அத தெரண)