தமிழ்மொழி பேசும் மக்களுக்கான தனி மாகாணமே, வடமாகாண சபையின் கோரிக்கை : இரா.சம்பந்தன்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


தமிழ்மொழி பேசும் மக்களுக்கான தனி மாகாணமே, வடமாகாண சபையின் கோரிக்கை : இரா.சம்பந்தன்

தமிழ்மொழி பேசும் மக்களுக்கான தனி மாகாணமே, வடமாகாண சபையின் கோரிக்கை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

வடக்கு-கிழக்கில் அதிகமாக தமிழ் மொழி பேசும் மக்கள் வாழ்வதனால் அவர்களிட்கு தனி மாகாணம் வழங்கவதில் தவறு இல்லை எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணம் தொடர்பில் மத்திய அரசே இறுதி முடிவு எடுக்கும் வேண்டும் எனவும்எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிளிநொச்சி இராணுவ முகாமிற்குள் அத்துமீறி தான் செல்லவில்லை எனவும், இது தொடர்பான எந்த விசாரணைகளிற்கும் முகங்கொடுக்க தயார் எனவும் இரா. சம்பந்தன் சிங்கள ஊடகத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.