தம்மிக பெரேரா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்


தம்மிக பெரேரா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்கின் தீர்ப்பு வரும் வரையில் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ தான் பதவிப் பிரமாணம் செய்யப் போவதில்லை என வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று உயர் நீதிமன்றுக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார்.

வர்த்தகர் தம்மிக்க பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது, அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றத்தில் ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் இன்று (20) நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, தமது தீர்மானத்தை சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.

இந்த மனுக்கள் நாளை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.