தற்போதைய ஆட்சியே மக்களுக்கு சுதந்திரமாக சேவை செய்யக் கூடியது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


தற்போதைய ஆட்சியே மக்களுக்கு சுதந்திரமாக சேவை செய்யக் கூடியது

நாட்டில் தற்போதுள்ள ஆட்சியே மக்களுக்கு சுதந்திரமாக சேவை செய்யக் கூடிய ஆட்சி என உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வென்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் சேவையின் பொருட்டு, முன்னைய ஆட்சியில் அப்பா, சித்தப்பா, மகன் என்ற நீண்ட வரிசையில் பலரிடம் அனுமதி பெறவேண்டி இருந்தது.

எனினும், தற்போதைய ஆட்சியில் அவ்வாறு இல்லை. ஒரு தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் அனைத்தையும் சிறப்பாக செய்துக்கொள்ளக் கூடியதாக உள்ளது எனவும் எஸ்.பி.நாவின்ன குறிப்பிட்டுள்ளார்.