கடந்த ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட படப்பிடிப்பின் போது தமது குழுவினர் சிரமப்பட்டதாக ‘தி நைட் மேனேஜர்’ படைப்பாளி சந்தீப் மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர், 2022 ஆம் ஆண்டில், மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.
இது அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்துடன் பொது எதிர்ப்புகளுக்கும் வழிவகுத்தது.
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையால், தமது குழுவினருக்கும்; இந்தியாவில் இருந்து உணவைப் பெறவேண்டிய நிலையை எதிர்கொண்டதாக சந்தீப் மோடி கூறியுள்ளார்.
இலங்கையில் அனைவருக்கும் பிடித்த காட்சிகளில் ஒன்றை படமாக்க தமது குழு உற்சாகமாக இருந்தது.
எனினும், பொருளாதார பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக, உணவு இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக, ஒரு நாள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாக சந்தீப் மோடி குறிப்பிட்டுள்ளார்.
‘தி நைட் மேனேஜர்’ என்ற திரைப்பட்டம், ஜோன் லீ கேரேயின் என்ற நாவலின் இந்தி மொழி தழுவலாகும்.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் 17 ஆம் திகதி திரையிடப்படவுள்ளது.
இதில் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘தி நைட் மேனேஜர்’ இலங்கையில் காலி, பெந்தோட்டை மற்றும் அஹங்கம ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.