தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?


தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் உள்ள நன்மைகள் தீமைகள் அல்லது கேரட் பச்சையாக சாப்பிட்டால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

உணவு வகையிலும், மருத்துவத்திலும் பல்வேறு பயன்களை தரவல்லது கேரட். கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. கரட்டின் முக்கியத்துவம் தெரியாமல் பலர் கரட்டை சாப்பாட்டில் புறக்கணிப்பது உண்டு.

கேரட் சாப்பிட்டால் என்ன பலன் தெரியுமா? கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், கேரட்டில் உள்ள சத்துக்கள் பற்றி நீங்கள் தெரிந்தால் இனி கேரட்டை தவிர்க்க மாட்டீர்கள்.

கேரட்டில் உள்ள சத்துக்கள் என்ன? – கேரட் மருத்துவ பயன்கள்

கேரட் அதன் சுவைக்கு ஏற்ப ஆரோக்கியத்திலும் சளைத்ததல்ல. கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் தரக் கூடியது.

கேரட்டில் அதிக அளவில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளதால், கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது கேரட்.

தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் கண்பார்வை சம்மந்தமான பிரச்சனை குறைந்து கண்பார்வை பளிச்சென தெரியும்.

கேரட்டில் உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு நல்லது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவும். சர்க்கரை நோயாளிகள் கேரட் சாப்பிடலாமா என்று பார்த்தால் அது அவர்களுக்கு மிகவும் உதவும்.

இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.குடல் புண் வராமல் தடுக்கலாம்.

புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை கேரட்டில் இருப்பதால் தினமும் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.

மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்துகள் நிறைந்த பரம்பரையில் பிறந்த பெண்களுக்கு தொடர்ந்து கேரட் சாறு அருந்த செய்ததில், அவர்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான ஆபத்து வெகுவாக குறைந்துதிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தக்காளி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும். பற்களுக்கு பலம் கிடைக்கிறது. ஈறுகள் கெடாமல் இருக்கும். வாய் புண்கள் சரியாகும்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து சீக்கிரம் குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது.

சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும்.

கேரட் சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாக இருக்க உதவும்.

வயிற்றில் கற்கள், புண்கள், கட்டிகள் இருப்பவர்களுக்கு கேரட் ஜூஸ் ஒரு சிறந்த மருந்தாகும்.

கேரட் சாருடன் சிறிதளவு இஞ்சி சாறு சேர்த்து குடித்து வந்தால் வாய்வு தொல்லை நீங்கும்.

கேரட்டில் உள்ள சத்துக்கள் தோலிற்கு புதுப் பொலிவை கொடுக்கிறது. உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள கேரட் மிகவும் பயன்படுகிறது.

தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வருவதால் தோல் சுருக்கங்கள் மெல்ல நீங்கி உடல் பொலிவு பெறும்.

தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

கேரட் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். உடலுக்கு நன்மை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் கேரட்டில் நிறைந்துள்ளதால் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

உடலுக்கு குளிர்ச்சியை வழங்க கூடியவற்றில் கேரட் முதன்மையானது. தினமும் காலை எழுந்ததும் சுத்தமான தண்ணீரில் முழு கேரட் ஒன்றை கழுவி விட்டு பச்சையாக சாப்பிட்டால் உடல்சூடு குறையும். கத்தியால் வெட்டாமல் கடித்து சாப்பிடுவது நல்லது.

கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கம், வலியை கரைக்க கூடியது. கேரட்டை பயன்படுத்தி கோடைகாலத்துக்கான ஜூஸ் தயாரிக்கலாம்.

தோலில் ஏற்படும் பிரச்னைக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. தோல் கருப்பாவதை தடுக்கிறது. தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை பசையாக்கி தடவினால் அரிப்பு, சிவப்பு தன்மை போகும். வேர்குரு மறையும்.

முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

கரட் சாப்பிடுவதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிகம் சுரப்பதின் காரணமாக பற்களில் பாக்டீரியா போன்றவை வளருவது தடுக்கப்படும்.

கொஞ்சம் கடினமாக இருக்கும் கரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பற்களில் உள்ள அழுக்கும் நீங்குகிறது.

கேரட்டை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுவின் அளவை அதிகரிப்பதோடு, விந்தணுவின் அடர்த்தியும் அதிகரிக்கும். குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் தினமும் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

மூட்டு வலியில் இருந்து விடுபட வேண்டுமானால், தினமும் கேரட்டை தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.

இதயம் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க உடலில் கொலஸ்ட்ரால் அதிக சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கேரட்டில் இயற்கையாகவே உடலில் கொலஸ்ட்ரால் சேர்வதை தடுக்கும் ஆற்றல் அதிகமிருக்கிறது.

தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் அல்லது கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

காயங்கள் வீக்கம் போன்றவற்றிற்கு பல இயற்கை வைத்திய மூலிகைகளைப் போல கேரட்டும் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. மேலை நாடுகளில் முற்காலத்தில் வீக்கம், வலி போன்றவற்றிற்கு கேரட்டை நன்கு அரைத்து பற்றுப் போட்டு சிகிச்சை செய்தனர்.

உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கேரட் ஜூஸ் குடித்தால், செரிமான அமிலத்தின் சுரப்பு சீராக தூண்டப்பட்டு, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

கேரட் ஜூஸ் வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ள ஒன்று என்பதால், தினமும் கேரட் ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம், சுவாச பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, சிகரெட் பிடித்தோ அல்லது சிகரெட் பிடிப்போரின் அருகில் இருந்தோ நுரையீரலில் படிந்த நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம், தாய்ப்பாலின் அளவு அதிகரிக்கும்.

அத்துடன் கால்சியம் குறைபாடு தடுக்கப்பட்டு, குழந்தைக்கு வேண்டிய வைட்டமின் ஏ சத்து கிடைத்து, குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.