துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மூன்று சடலங்கள் அநுராதபுரத்தில் மீட்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மூன்று சடலங்கள் அநுராதபுரத்தில் மீட்பு

அனுராதபுரம் திருப்பனை பிரதேசத்தில் கார் ஒன்றுக்குள் இருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

திருப்பனை, ஹிதோகம, துருவில பகுதியில் இன்று கார் ஒன்றில் இந்த சடலங்கள் கிடந்துள்ளன.

சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம், இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சடலங்கள் மூன்றும், அவ்விடத்தில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சி.ஏ.கே 0692 என்ற இலக்கத் தகட்டைகொண்ட வாகனத்திலேயே இருந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.