துமிந்தவை தூக்கில் போட ஜனாதிபதி அனுமதிப்பாரா? காத்திருக்கும் தூக்குமேடை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


துமிந்தவை தூக்கில் போட ஜனாதிபதி அனுமதிப்பாரா? காத்திருக்கும் தூக்குமேடை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உட்பட நான்கு பேரை கொலை செய்த குற்றவாளிகளான துமிந்த சில்வா உட்பட நால்வருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஐவரின் உயிர் பிரியும் வரை தூக்கில் தொங்கவிடுவதற்கு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தூக்கு மேடை ஆயத்தமாக உள்ளதென சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்காக ஜனாதிபதி கையொப்பமிடும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தண்டனை செயற்படுவதற்கு ஆயத்தமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு தற்போது வரையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு வழங்கப்படும் வெள்ளை நிறத்திலான உடை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.