துருக்கி, இந்தோனேஷியாவில் பயங்கரவா தாக்குதல் பலர் பலி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


துருக்கி, இந்தோனேஷியாவில் பயங்கரவா தாக்குதல் பலர் பலி

துருக்கியில் இடம்பெற்ற வெடிச்சம்பவம் ஒன்றில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 39 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் தென் மாகாணமான டியர்பக்கீர்ரில் உள்ள காவல்துறை தலைமையகத்தை குறி வைத்து இந்த குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குர்திஷ் ஊழியர் கட்சியை சேர்ந்த போராளிகளே இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை எவரும் உரிமை கோரவில்லை.

வெடிப்பொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை கட்டடத்தில் மோதியதன் பின்னர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நேற்று முன்தினம் துருக்கிய தலைநகர் இஸ்ரான்புல்லில் இடம்பெற்ற பிறிதொரு தற்கொலை குண்டுத்தாக்குதலில் 10 ஜேமன் சுற்றுலாப் பயணிகள் பலியானமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஆறு பொது மக்கள் கொல்லப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்ட ஐந்து துப்பாக்கிதாரிகளும் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 20 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் – சூரியன்