துருக்கி – சிரியா உயிரிழப்பு எண்ணிக்கை 28,000 – இரு நாடுகள் பணிகளில் இருந்து விலகின!


துருக்கி – சிரியா உயிரிழப்பு எண்ணிக்கை 28,000 – இரு நாடுகள் பணிகளில் இருந்து விலகின!

துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில்

துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்றளவில் (12) 28,000த் தாண்டியுள்ளது.

கடந்த வாரம் திங்கட்கிழமை 7.8 ரிக்டர் அளவில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தெற்கு துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட வரும் மீட்பு நடவடிக்கைகளின் போது மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்ற போதிலும் பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், ஜேர்மன் மீட்பு பணியாளர்களும் ஆஸ்திரிய இராணுவமும் நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி பெயர் குறிப்பிடப்படாத குழுக்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கியில் உணவு விநியோகம் குறைவடைந்து வருவதால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது.

அங்கு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டத்தை மீறும் எவரையும் தண்டிப்பதற்காக அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்க தாம் தயாராக உள்ளதாக துருக்கியின் ஜனாதிபதி ரசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தநிலையில், வடக்கு மற்றும் வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தன்னார்வ மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ளதாக Syria Civil Defence (White Helmets) அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 108 மணிநேர தேடுதலுக்குப் பின்னர், இடிபாடுகளுக்கு அடியில் யாரும் உயிருடன் இருப்பார்கள் என்று நம்பவில்லை என்று குழுவினர் தெரிவித்தனர்.

2011 ஆம் ஆண்டு முதல் சிரியா கிளர்ச்சியாளர்களின் மோதல்களினால் பேரழிவிற்குள்ளானது.

இந்தநிலையில், நிலநடுக்கத்திற்குப் பிறகு, அந்த பகுதிகளில் வாழும் 04 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவியை நம்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும், சிரியாவில் 5.3 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி, தங்குமிடம் போன்றவை தேவைப்படலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

நாட்டின் அரசியல் அமைப்பை சிக்கலாக்கும் வகையில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவின் பெரும்பகுதி துருக்கி மற்றும் அமெரிக்க ஆதரவு – எதிர்ப்புப் படைகள், குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் மற்றும் சன்னி இஸ்லாமிய போராளிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த கட்டுப்பாடுகள் மனிதாபிமான அணுகலை கடினமாக்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

துருக்கிக்கும் சிரியாவிற்கும் இடையே உள்ள ஒரே நடைபாதையான பாப் அல்-ஹவா கடவையை கடக்க முதல் ஐ.நா மனிதாபிமான உதவித் தொடரணிக்கு மூன்று நாட்கள் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா ஆகியோர் நேற்று (11) லட்டாகியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களைக் காணச் சென்றுள்ளனர்.

இவ்வாறான அனர்த்தங்களின் போது, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகள் தமக்கு கிடைக்கவில்லை என சிரிய ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேரிடர்கள், காலநிலை மற்றும் நெருக்கடிகள் தொடர்பான பணிப்பாளர் கரோலின் ஹோல்ட்டின் கூற்றுப்படி, துருக்கியை மீட்டெடுக்க இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகலாம்.

மேலும் சிரியாவில் சேதம் ஏற்பட்டால், அது 5-10 ஆண்டுகள் ஆகலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, சிரிய-அமெரிக்க நடிகர் ஜே அப்டோ, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து CNN உடன் கருத்து வெளியிடுகையில்.

மக்களுக்கு உதவுவதிலும் நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் தாக்கம் செலுத்துவதாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

“பூகம்பங்கள், அவற்றுக்கு எல்லைகள் இல்லை. எனவே, எல்லைகளும் அரசியலும் நாட்டின் வடமேற்கில் உள்ள சிரிய குடிமக்களின் மனித உரிமைகளை மீட்டெடுப்பதற்கான உரிமையை ஏன் பறிக்கின்றன?

இதன்காரணமாக சர்வதேச சமூகம் அவசரமாக தலையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகமும் நேற்று சிரியா -அலெப்போ நகருக்கு 290,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களுடன் விமானம் மூலம் வந்தடைந்துள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்க பாதிப்புகளை அடுத்து கொள்ளையடித்ததற்காக கிட்டத்தட்ட 50 பேரை துருக்கி கைது செய்துள்ளது.