துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம்! பெரும் உயிர் ஆபத்தில் இலட்சக்கணக்கானோர்


துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம்! பெரும் உயிர் ஆபத்தில் இலட்சக்கணக்கானோர்

துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில்

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கத்தில் இருந்து தப்பியவர்கள் தொடர்ந்தும் அச்ச நிலையில் வீடுகளுக்கு வெளியே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய நில நடுக்கத்தினை தொடர்ந்து அந்த இரு நாடுகளிலும் தொடர்ச்சியாக சிறிய அளவிலான நில நடுக்கங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நில நடுக்கம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களில் 200000 மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் துருக்கியில் மட்டும் 45,968 பேரும் சிரியாவில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக அரசாங்கங்கள் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிந்து போயுள்ளன.

இந்தநிலையில், துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் நில நிலக்கம் ஏற்படலாம் என உறுதிப்படுத்தப்பட்ட இடங்களில் 15 இலட்சம் மக்கள் தொடர்ந்தும் வசித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது.