தூக்கத்தில் இருந்த கணவனின் கழுத்தை அறுத்த மனைவி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


தூக்கத்தில் இருந்த கணவனின் கழுத்தை அறுத்த மனைவி

எம்பிலிபிட்டிய, உடவலவ பிரதேசத்தில் கணவனை, மனைவி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (30) அதிகாலை நித்திரையில் இருந்த கணவனின் கழுத்தில் கூரிய ஆயுத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில் பொலிஸார் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுத்தையும் குறித்த பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்