தூக்கமின்மைக்கு தீர்வு வேண்டுமா? இதை செய்யுங்கள்


தூக்கமின்மைக்கு தீர்வு வேண்டுமா? இதை செய்யுங்கள்

தூக்கமின்மைக்கு தீர்வு என்ன? நிம்மதியான தூக்கம் வர வேண்டும் என்பது பலரது ஆசை. நல்ல தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.

நல்ல தூக்கம் வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனின் ஆசை. சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் தான்.

இரவில் 8 மணி நேரம் தூங்கினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் நலக் கோளாறுகளுக்கு தூக்கமின்மை ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

விழித்திருக்கும் போது நம்முடைய புலன்களும் விழிப்படைந்த நிலையில் இருக்கும். தூங்கினால் தான் நம் உடல் உறுப்புக்களுக்கும், புலன் உணர்வுக்கும் சிறிது ஓய்வு கிடைக்கும்.

தூக்கமின்மையால் அவதிப்படும் பலருக்கு நாளாக ஆக சோர்வும் மன அழுத்தமும் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாவார்கள்.

ஆகவே இங்கு நல்ல தூக்கம் வர டிப்ஸ் என்ன என்று பார்ப்போம்.

தூக்கம் வராமல் இருப்பதற்கு என்ன காரணம் – இரவில் நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

இன்று தூக்கம் வராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றால் சஞ்சலமான மனது தான். தூக்கம் வராத போது, ஸ்மார்ட்போனில் உள்ள நோட்டிபிகேஷன்களை பார்ப்பது நிலைமையை மேலும் மோசமாக்கும்.

ஒளியை கண்டதும் உங்கள் மூளை காலை நேரத்து ஹார்மோன்களை தூண்டி விடுகிறது. எனவே, மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் பலன் இருக்காது. போனை சைலண்ட் மோடில் வைத்திருப்பது பலருக்கு பலன் தந்துள்ளது.

மாலை நேரத்தில் யாருடனும் வாக்குவாதம், அல்லது மோதலில் ஈடுபடும் போது உங்கள் மன நிலை பாதிக்கப்பட்டு உளவியல் தாக்கம் ஏற்படலாம். இதிலிருந்து முழுமையாக அமைதி பெறுவது கடினம். மாலை நேரத்து மோதல்களை தவிர்ப்பது நல்லது.

ஒரு பக்க தலைவலி வர காரணம் இதுதான்; நீங்க வழிகள் இதோ!

மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? தெரிந்துகொள்ளுங்கள்

பணியிடத்தில் இத்தகைய சூழல் ஏற்பட்டால், மறுநாள் காலை அது பற்றி பேசலாம் என மென்மையாக தெரிவிக்கவும். குடும்பத்தில் விவாதம் ஏற்படும் நிலை இருந்தால் கொஞ்சம் தொலைவு நடந்துவிட்டு வரலாம்.

மாலை நேரத்தில் தீவிர உடற்பயிற்சி செய்தால் தூக்கத்தின் மீது தாக்கம் இருக்கலாம். காலை நேரம் தான் உடற்பயிற்சிக்கு ஏற்ற நேரம்.

காலையில் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாவிட்டால், சூரிய அஸ்மனத்திற்கு முன் உடற்பயிற்சி செய்யவும். யோகா, நடைப்பயிற்சி போன்ற மிதமான செயலிகளில் ஈடுபடலாம்.

பலரது படுக்கையறை அலங்கோலமாக இருக்கலாம். அறை முழுவதும் பொருட்கள் சிதறிக்கிடக்கலாம். இந்த காட்சி மனதிலும் தாக்கம் செலுத்தும்.

மனம் அமைதி அடைவதை இது தடுக்கும். எனவே படுக்கையறையை சுத்தமாக வைத்திருப்பது நல்லது.

சில உடல் நலக் கோளாறுகள் காரணமாக, நீண்ட நாட்கள் தொடர் மருந்துகள் எடுத்துக்கொள்வதாலும், சிலர் தூக்கத்தை தூக்கத்தை இழக்க நேரிடலாம்.

சிலருக்கு வயது முதிர்வின் காரணமாகவும் தூக்கமின்மை ஏற்படலாம். ஆனால் அதுவும் மன நலன் சார்ந்ததே.

இரவில் தூக்கம் வராத காரணம் என்ன என்று பார்த்தால் இதுபோன்ற பல காரணங்களை பட்டியலிடலாம்.

தூக்கமின்மைக்கு தீர்வு – நல்ல தூக்கம் வர டிப்ஸ் – இரவில் நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்

இரவு உணவுகளில் பச்சைக் காய்கறிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகளில் நல்ல ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

பழங்களில் வாழைப்பழம், செரி பழம் மற்றும் கிவி போன்ற பழங்கள் நல்ல தூக்கத்தை தரக்கூடியது. இரவு உணவுகளில் இவற்றை சேர்த்துக் கொள்ளுவது சிறந்தது.

இரவு உணவுக்கு பின் இளஞ்சூடான பாலில் சிறிது ஏலக்காய் கலந்து குடித்து வர இரவில் நல்ல தூக்கம் வரும். அதே போல பாலில் சிறிது மிளகு மற்றும் மஞ்சள் கலந்து குடித்து வர நன்கு தூக்கம் வரும்.

இரவு தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை சாப்பிட்ட வேண்டும். சாப்பிட்டு சிறிது நேரம் நடைப் பயிற்சி செய்வது சிறந்த தூக்கத்தை தரும்.

பகலில் அதிக நேரம் தூங்காதீர்கள். இது இரவு தூக்கத்தை கெடுக்கும். உங்களுக்கு நிச்சயம் தூங்க வேண்டும் என நினைத்தால், பகலில் அரை மணி நேரம் மட்டுமே தூங்குங்கள்.

தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது. 10 மணிக்கு முன்னதாக தூங்குதல் சிறந்தது.
அதிகமாக தண்ணீர் அருந்தாதீர்கள் இது தூக்கத்தில் சிறுநீர் கழிக்க எழும்ப நேரிடும்.

காபி மற்றும் டீ ஆகிய இரண்டையும் இரவில் குடிப்பதை தவிர்ப்பது நல்லது இவை இரண்டும் தூக்கத்தை தடுக்கக்கூடியவை.

காபி மற்றும் டீ குடிப்பதாக இருந்தால் மாலை நான்கு மணியோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.

மது அருந்துவது உங்கள் தூக்கத்தை கெடுப்பதோடு உங்களின் உடல் நலத்தையும் பாதிக்கும். மது குடித்தால்தான் தூக்கம் வரும் என்பது ஒரு சிலரின் எண்ணம். ஆனால் அது மிகவும் தவறு.

இயற்கையாக வரும் தூக்கத்தை செயற்கையாக வர வைத்தால் அதன் பாதிப்புகள் மிகவும் அதிகமாகும்.

நிம்மதியான தூக்கம் வர மதுப்பழக்கம் உள்ளவர்கள் அதனை அறவே தவிர்ப்பது மிகவும் நல்லது