தெருநாய்களை கட்டுப்படுத்த அமைச்சரவை நடவடிக்கை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


தெருநாய்களை கட்டுப்படுத்த அமைச்சரவை நடவடிக்கை

வளர்ப்பு நாய்­களை பதி­வு­செய்யும் கட்­டளைச் சட்டம் மற்றும் நீர் வெறுப்­புநோய் தொடர்­பான கட்­டளைச் சட்டம் திருத்­தப்­ப­ட­வுள்­ளது. இதற்­காக அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்­துள்­ள­தாக அமைச்­சரும், அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.

மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா இது தொடர்பில் அமைச்­ச­ர­வைக்கு முன்­வைத்த பத்­தி­ரத்­திற்கே அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்­துள்­ள­தா­கவும் அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக குறிப்­பிட்டார்.

வாராந்த அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­ற­போதே இத் தக­வலை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக வெளி­யிட்டார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் விப­ரிக்­கையில்,

இந்த சட்­டத்தில் காலத்­திற்­கேற்­றால்போல் திருத்தம் செய்து குறித்த இரண்டு சட்­டங்­க­ளையும் இணைத்து ஒரு தனிச் சட்டம் கொண்டு வரு­வ­தற்கு ஏற்­க­னவே அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. இதற்­க­மை­வா­கவே இக் கட்­டளைச் சட்டம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று வீதி­யோர நாய்கள் மூலம் பொது மக்கள் எதிர்­நோக்கும் அசெ­ள­க­ரி­யங்கள், நோய்கள் மற்றும் சுகா­தார அச்­சு­றுத்­தல்கள் தொடர்பில் அமைச்­ச­ர­வையின் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

எனவே இது தொடர்­பான தக­வல்­களை சுகாதார அமைச்சு, கிராமிய பொருளாதார அமைச்சு யோசனைகளை முன்வைக்க வேண்டுமென்றும் அறிவிப்பதற்கு அமைச் சரவை தீர்மானித்துள்ளது.