தேசிய நல்லிணக்கத்தினை கட்டியயெழுப்ப அனைத்து தரப்பினதும் ஒத்துழைப்பு அவசியம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


தேசிய நல்லிணக்கத்தினை கட்டியயெழுப்ப அனைத்து தரப்பினதும் ஒத்துழைப்பு அவசியம்

வடக்கு, தெற்கு மக்களிடையே தேசிய இன நல்லிணக்கத்தினை கட்டியயெழுப்ப அனைத்து தரப்புக்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய இன நல்லிணக்கத்தினை நாட்டில் கட்டியெழுப்பு வகையில் சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கிய சமத்துவ நிகழ்வுகள் யாழ் ரீம்பர் மண்டபத்தில் நடைபெற்றன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் இனவாத்தினை மூவின மக்களிடமும் பிரயோகிக்க முற்படுகின்றார்கள். அதிகாரத்தினை தக்க வைப்பதற்காக இனவாதத்தினை தூண்டுகின்றார்கள்.

இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியினர் மீண்டும் அதிகாரத்தினை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றார்கள். வடக்கில் மீண்டும் அழிவு ஏற்பட வேண்டும் என்று இனவாதம் பேசுகின்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேசிய இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதனை பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்ய வேண்டும். இந்த நாட்டின் மூவின மக்களினதும் கலை, கலாச்சாரம், தொடர்பாடல் சமூக நல்லிணக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது என்றார்.