பொரளையில் உள்ள ஓல்செயின்ட்ஸ் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
இன்றைய தினம் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அவர் இவ்வாறு இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
இதேவேளை, பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிக்கும் வகையிலான வெடி குண்டொன்றை வைப்பதற்கான திட்டத்தை வகுத்தது தான் என, கைது செய்யப்பட்டுள்ள 75 வயதான ஓய்வு பெற்ற வைத்தியர், கொழும்பு குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் குறித்த தேவாலயத்தின் மீது வெறுப்புடன் இருந்துள்ளமை, விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.