பண்டிகை காலத்தில் நடமாட்டத் தடை அமுலாகுமா?


பண்டிகை காலத்தில் நடமாட்டத் தடை அமுலாகுமா?

எதிர்வரும் பண்டிகை காலத்தின்போது நடமாட்ட தடையின்றி மாற்றுவழி ஊடாக நிலைமையை முகாமைத்துவப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நடமாட்ட தடையை அமுல்படுத்தாமல் பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பண்டிகை காலத்தின்போது பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக அதிக சன நெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.