நடிகர் சங்கத்தில் இருந்து விலகிய சிம்பு!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நடிகர் சங்கத்தில் இருந்து விலகிய சிம்பு!

சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சிம்பு தோல்வியடைந்தார். அதன்பின்னர் நடிகர் சங்கத்தின் எந்த ஒரு நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ள சிம்பு, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அடிப்படை உறுப்பினர் பதவிக்கான விலகல் கடிதத்தை 22-ம் தேதி அளிக்க உள்ளார்.
நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவது குறித்து நடிகர் சிம்பு கூறியதாவது: பல்வேறு காரணங்களுக்காக நடிகர் சங்கத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். நடிகர்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் உதவத்தான் நடிகர் சங்கம் உள்ளது. ஆனால், எனக்கே ஒரு பிரச்சினை வந்தபோது நடிகர் சங்கம் ஒரு உதவியையும் செய்யவில்லை.
சமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டி என்னை மிகவும் அப்செட் ஆக்கிவிட்டது. அந்த போட்டியின் மூலம், பெரும்பாலான நடிகர்கள் ஜோக்கர்கள் ஆக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
சிம்பு தற்போது இது நம்ம ஆளு படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது