நல்லாட்சியில் இலங்கை விமான ப்படை விமானங்களை கட்டணம் செ லுத்தாமல் பயன்படுத்தியவர்க ளின் பெயர்பட்டியல் வௌியானது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நல்லாட்சியில் இலங்கை விமான ப்படை விமானங்களை கட்டணம் செ லுத்தாமல் பயன்படுத்தியவர்க ளின் பெயர்பட்டியல் வௌியானது

நல்லாட்சியில் இலங்கை விமானப்படை விமானங்களை கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்தியவர்களின் பெயர்பட்டியல் வௌியானது

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் கடமை பயணங்களுக்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டரில் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

வௌிநாட்டு மற்றும் உள்நாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலரின் போக்குவரத்து தேவைக்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களை இலவசமாக வழங்கியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் உதய கம்மன்பில வாய்வழி பதில் எதிர்பார்த்து கேட்ட கேள்விக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன நாடாளுமன்றத்தில் வழங்கிய பதிலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான பணம் இதுவரையிலும் செலுத்தவில்லை என நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.