நல்லிணக்க செயலணி தமது செயற்பாடுகளை ஆரம்பித்தது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நல்லிணக்க செயலணி தமது செயற்பாடுகளை ஆரம்பித்தது

பிரதமர் காரியாலயத்தினால் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்கத்திற்கான வழிமுறைகள் நோக்கிய பிரச்சார செயலணி பொதுவான கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

நல்லிணக்க வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் சம்பந்தமாக தேடிப்பார்த்து அறிக்கை சமர்பிப்பதற்காக சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையில் இந்த செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 11 பேர் அடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நல்லிணக்கத்திற்கான பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் சம்பந்தமாக தேடிப்பார்ப்பதுடன், தற்போது பொதுவான கலந்துரையாடல்களையும் ஆரம்பித்துள்ளனர்.