நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு குறித்த யோசனை ரத்து!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு குறித்த யோசனை ரத்து!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்த யோசனை ரத்து செய்யப்படவுள்ளது.

கடந்த நாட்களில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி மற்றும் காரியாலய கொடுப்பனவுகளை உயர்த்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது எந்தவொரு கட்சியின் தலைவரும் கொடுப்பனவு அதிகரிப்பிற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை.

எனினும் தற்போது இந்த யோசனைக்கு எதிராக சில அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த எதிர்ப்பையும் வெளியிடவுள்ளனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் இந்த கொடுப்பனவு அதிகரிப்பு அவசியமற்றது என கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்ட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் ஆளும் கட்சியும் குறித்த யோசனையை ரத்து செய்துகொள்ள தீர்மானித்துள்ளது.