நாடுகடந்த வணிக நிறுவனங்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான முழுமையான ஆதரவை, பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட கூட்டத்தில் இலங்கை வெளிப்படுத்தியுள்ளது.
இணையவழி மெய்நிகர் முறையில் நடைபெற்ற பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் 19வது அமைச்சர்கள் கூட்டத்தில், உரையாற்றியபோது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதார வளர்ச்சியின் பாதை ஆசியாவை நோக்கி நகர்வதால், பிம்ஸ்டெக் நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கூறுகள் தொடர்புடையதாக இருப்பதற்காக புத்துயிர் பெற வேண்டும்.
அத்துடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் முன்னெச்சரிக்கையுடன் பணியாற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அனைவருக்கும் உருமாறும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்காக, உள்ளகப் பிராந்திய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், நாடுகடந்த வணிக நிறுவனங்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கையின் முழுமையான ஆதரவையும் வெளிவிவகார அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.
தாய்லாந்தின் தலைமைத்துவத்தின் கீழ், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், மியன்மார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம், தாய்லாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
- பாடுமீன் ரயிலில் மீட்கப்பட்ட 10 நாட்களேயான சிசு!
- ஜெனீவாவில் 6வது காலமுறை மீளாய்வில் இலங்கை பங்கேற்பு!
- தந்தையின் கொடூர சித்திரவதைக்கு உள்ளான ஒன்றரை வயது குழந்தை! சந்தேகநபர் கைது
- உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான விசேட வர்த்தமானி வெளியீடு!
- தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி திடீரென கைது
- உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்க ஜெலன்ஸ்கி வலியுறுத்து
- இணையத்தில் வைரலாகும் காட்சிகள்: ஹா ஹா நடிகை மீனாவா இது!
The seven countries along the Bay of Bengal face several challenges in the energy sector, like access and security, despite having access to vast resources.
India, Bhutan, Bangladesh, Myanmar, Thailand, Nepal and Sri Lanka are members of the regional organisation Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC). Even though it is home to 1.7 billion people with a combined GDP of $3.7 trillion, progress for BIMSTEC has been gradual.