நாடு திரும்பினார் ஜனாதிபதி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நாடு திரும்பினார் ஜனாதிபதி

பிரித்தானியா மற்றும் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாயகம் திரும்பியுள்ளார்.

பெங்கலூரில் இருந்து நேற்று இரவு 10.40 அளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று இந்தியாவின் சாஞ்சி பௌத்த புனிதத் தளத்திற்கும் ஜனாதிபதி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் பாரம்பரியம் மிக்க உஜ்ஜைனி நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சிம்ஹஸ்தா கும்பமேளா நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார்.

இதையொட்டி ‘சரியான வழியில் வாழ்வோம்’ என்ற 3 நாள் மாநாடும் நடந்தது. இதன் நிறைவு நாளான நேற்று 51 அம்ச திட்டங்கள் அடங்கிய சிம்ஹஸ்தா பிரகடனத்தை பிரதமர் மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர் என, இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

(அத தெரண)