நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பலத்த மழையினால் 4 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் கேட்டுக்கொண்டுள்ளது.