நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு தேவையில்லை!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு தேவையில்லை!

ஜனாதிபதி மைத்திரிபால பல வேலைகள் செய்யவுள்ளதாக வாயினால் கூறுகிறாரே தவிர, செயலில் காட்டுவது இல்லை என்று கெட்டம்பே விகாரையின் விகாராதிபதி கெப்படியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது எமது நாட்டிற்கு புதிய அரசிலமைப்பு ஒன்று தேவையில்லை எனவும், பழைய அரசியலமைப்பில் திருத்தங்களை முன்னெடுப்பதே சிறந்தது என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில, ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ள விடயங்களை நிறைவேற்றுமாறு தான் எத்தனை முறை எடுத்துக்கூறியும், செய்கிறேன் என்று கூறுவதை தவிர எதையும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஆட்சி பதவியேற்று ஒன்றரை வருடங்களில் அரசியல் பழிவாங்கல்களை மட்டுமே ஜனாதிபதி முன்னெடுத்துள்ளதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்