நாட்டு மக்கள் எதிர்நோக்கவுள்ள அடுத்த ஆபத்து – உணவு தட்டுப்பாடு ஏற்படும் – சபாநாயகர் எச்சரிக்கை


நாட்டு மக்கள் எதிர்நோக்கவுள்ள அடுத்த ஆபத்து – உணவு தட்டுப்பாடு ஏற்படும் – சபாநாயகர் எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார தட்டுப்பாடுகளை தவிர நாட்டில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சபாநாயகர் தெரிவித்தார்.

இன்று (06) காலை பாராளுமன்றம் ஆரம்பமாகி விசேட உரையொன்றை ஆற்றிய போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாப்பவர் என்ற வகையில் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனநாயக ரீதியில் தீர்வு காண முடியும் என தெரிவித்த சபாநாயகர், இந்த வார இறுதிக்குள் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான பொதுவான திட்டத்தை வகுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.