எதிர்காலத்தில் நான்காவது கொவிட் தடுப்பூசியையும் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பொதுமக்கள் கொவிட் தடுப்பூசி அட்டையை இயன்றளவு கவனமாக பயன்படுத்த வேண்டும் என கொழும்பில் இன்று(13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி அட்டையை தரவு களஞ்சியத்திற்கு உள்வாங்கி, QR கோட் முறைமைக்குள் இணைத்து, சில சந்தர்ப்பங்களில், கைத்தொலைபேசி ஊடாகவோ அல்லது வேறு முறைமையிலோ பயன்படுத்தும் வரையில், அதனைப் பாதுகாப்பாக வைத்திருப்பது கட்டாயமாகும்.
எதிர்காலத்தில், மூன்றாம் தடுப்பூசியின் பின்னர், நான்காம் தடுப்பூசியையும் வழங்கவேண்டி ஏற்படலாம்.
அதற்காக தடுப்பூசி அட்டையை லெமினேட் செய்வதை தவிர்க்க வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.