நாமல் தப்பும் நிலை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நாமல் தப்பும் நிலை

பிரபல ரகர் வீரர் தாஜுடின் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச மற்றும் கொலைக்கு உதவிய முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் பதில் பொலிஸ்மா அதிபராக எஸ்.எம்.விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ள நிலையில், இந்த மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அனுர சேனநாயக்கவினால் நாமல் ராஜபக்சவுக்கு குறுந்தகவல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் இன்று முதல் தற்போதைய பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் ஓய்வு பெற்றுள்ளதுடன், புதிய பொலிஸ்மா அதிபராக மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரியாக செயற்பட்டவரும், தற்போது ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு பொறுப்பாகவுள்ள எஸ்.எம்.விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.எம்.விக்ரமசிங்க மற்றும் அனுர சேனாநாயக்கவும் நல்ல நண்பர்கள் என பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதியதாக நியமிக்கப்படவுள்ள பொலிஸ்மா அதிபரை, நாமல், அங்கிள் என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமான உறவினை கொண்டுள்ளார்.

கடந்த வருடம் மைத்திரியின் அருகில் நாமல் ராஜபக்சவின் பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த குற்றச்சாட்டிலிருந்து நாமலை காப்பாற்றியதும் புதியதாக நியமிக்கப்படவுள்ள பொலிஸ்மா அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.