நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு!

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யோசனையில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உட்பட நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை வழங்கியமை காரணமாக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர கூட்டு எதிர்க்கட்சியினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிதியமைச்சருக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பின்னர், கிடப்பில் போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.