நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகிக்க ஆயத்தமாகும் ஜனாதிபதி!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகிக்க ஆயத்தமாகும் ஜனாதிபதி!

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட இறுதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன திகழ்கிறார்.

அவர் தனது முழு அதிகாரங்களையும் வெளிப்படுத்தாமையால், அவர் அரசியல் பின்னடைவை சந்தித்துள்ளதாக அவரது அரசியல் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி செயற்பட வேண்டும் எனவும் முக்கியமாக மீண்டுமொரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என அவருக்கு நெருக்கமானவர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கான சூழலை தற்போது தெரிவு செய்துள்ளதனை காணமுடிகின்றது.

கொழும்பில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் மின்னணு கழிவு தடுப்பு வாரம் ஒன்றை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றிருந்தார்.

இதன்போது பாரிய திட்டமொன்றிற்காக மண் மற்றும் காடுகளை அழிப்பது தொடர்பிலான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரிகளை கடுமையாக கண்டிக்கும் வகையில் உரையாற்றியிருந்தார்.

அனுமதியுடன் மேற்கொள்ளப்படும் அழிப்பு தொடர்பில் அந்த நிறுவனங்களின் அதிகாரிகளை கண்டுபிடித்து ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு பின்வாங்கப்போவதில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்மூலம் ஜனாதிபதி தனக்கத்தே உள்ள நிறைவேற்று அதிகாரங்களை தற்போது பகிரங்கமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக அரசியல் ஆய்வார்கள் தெரிவித்துள்ளனர்.