நீதவான் திலின கமகேவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக உத்தரவு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நீதவான் திலின கமகேவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக உத்தரவு

கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

போலி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி குட்டி யானை ஒன்றை தன்னிடம் வைத்திருந்தமை சம்பந்தமாக இதற்கு முன்னரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு திலின கமகேவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் மேலதிக நீதவான் திணைக்களத்தில் ஆஜராகவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினர்.

இதனால், திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு திலின கமகேவுக்கு அறிப்பாணை அனுப்புமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் எதிர்வரும் 25ம் திகதி முற்பகல் 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு திலின கமகேவுக்கு உத்தரவிட்டுள்ளார்.