நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றச் சென்ற கடற்படை வீரர் உயிரிழப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றச் சென்ற கடற்படை வீரர் உயிரிழப்பு

நீராடச் சென்ற பெண் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்ட போது அவரை காப்பாற்ற முயன்ற விமானபடை வீரர் பெண்ணை காப்பாற்றிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (16) மாலை 4 மணியளவில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கினிகத்தேனை வழியாக ஓடும் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 36 வயது மதிக்கதக்க பெண் நீரில் அடித்துச்செல்லும் நிலையை கண்ட விமானபடை வீரர் பெண்ணை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.

இந்த நிலையில் பெண்ணை காப்பாற்றிய விமானபடை வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த விமானபடை வீரர் கினிகத்தேனை யட்டிபேரிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயது மதிக்கதக்க எஸ்.டீ.மனுக்க இஷான் சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த வீரரின் சடலம் தெலிகம வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் உயிர் தப்பிய குறித்த பெண் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிக்சசைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.