பங்களாதேஷ் நாட்டிடம் மீண்டும் கடன் கேட்கும் இலங்கை


பங்களாதேஷ் நாட்டிடம் மீண்டும் கடன் கேட்கும் இலங்கை

பங்களாதேஷ் நாட்டிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை இலங்கை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது இரு நாடுகளுக்கும் இடையிலான நாணய பரிமாற்ற ஏற்பாடாக இது அமையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னரும், அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க பங்களாதேஷ் இதேபோன்ற வசதியை இலங்கைக்கு வழங்கியது.

இதேவேளை ஏற்கனவே இந்தியாவிடம் இருந்து பெற்ற ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக மேலும் ஒரு பில்லியன் டொலர்களை இலங்கை இந்தியாவிடம் கோரியுள்ளது

அத்துடன் சீனாவிடம் இருந்தும் 2.5பில்லியன் டொலர்களை இலங்கை கடனாக கோரியுள்ளது.