பசில் ராஜபக்‌ஷவிற்கு வௌிநாட்டிலிருந்து பணம் வருகிறதா? அம்பலப்படுத்தினார் தயாசிறி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பசில் ராஜபக்‌ஷவிற்கு வௌிநாட்டிலிருந்து பணம் வருகிறதா? அம்பலப்படுத்தினார் தயாசிறி

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிநாடொன்றின் உதவியுடன் ஐக்கிய தேசிய கட்சிக்காக ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறினார்.

பசில் ராஜபக்ஷ இவ்வாறு செய்வதனூடாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபடும் என்றும், அதற்கு அவருக்கு தேவையான பணம் வெளிநாட்டில் இருந்து கிடைக்கின்றது என்றும் அமைச்சர் இங்கு கூறினார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ காலி மே தின கூட்டத்திற்கு வருகைதர மாட்டார் என்பது தனக்குத் தெரியும் என்றும், அவ்வாறு வருவாராக இருந்தால் தான் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாகவும், தனக்கு பதவியை விட்டுச் செல்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் தயாசிறி ஜயசேகர கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது, பசில் ராஜபக்ஷவிற்கு எந்த நாட்டில் இருந்து பணம் கிடைக்கின்றது என்று ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, தயாசிறி ஜயசேகர சரியான பதில் ஒன்றை வழங்கவில்லை.