படைவீரர் நினைவு நிகழ்வுக்கு செலவிடும் தொகை குடும்பங்களின் நலனுக்காக செலவிடத் தீர்மானம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


படைவீரர் நினைவு நிகழ்வுக்கு செலவிடும் தொகை குடும்பங்களின் நலனுக்காக செலவிடத் தீர்மானம்

படைவீரர் நினைவு நிகழ்வுக்கு செலவிடும் தொகை படைவீரர் குடும்பங்களின் நலனுக்காக செலவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

படைவீரர் நினைவு நிகழ்வுகளுக்காக செலவிடப்படும் பல கோடி ரூபா பணம், அவர்களின் குடும்பங்களது நலன்களுக்காக செலவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

படைவீரர்களின் மனைவியர், பிள்ளைகள், பெற்றோரின் நலன்புரிக்காக இந்த நிதி செலவிடப்படவுள்ளது.

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட படைவீரர் நினைவு நிகழ்வுகளிற்காக பல கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு படைவீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வி வசதி ஏற்படுத்தல், வைத்திய வசதிகளை ஏற்படுத்தல், வேறு தேவைகளை பூர்த்தி செய்தல் புலமைப் பரிசில்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கொழும்பு ஊடகங்களுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

படைவீரர் நினைவு நிகழ்வுகள் இம்முறை எளிமையான முறையில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரின் போது உயிர் நீத்து வீர விபூசன பட்டம் வென்ற 29 படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றும் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement