IPL 2016 :பயிற்சியாளரை கெட்ட வார்த்தையில் திட்டிய ப்ரீத்தி ஜிந்தா!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


IPL 2016 :பயிற்சியாளரை கெட்ட வார்த்தையில் திட்டிய ப்ரீத்தி ஜிந்தா!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கரை, அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா அவமரியாதை செய்ததுடன் வேலை விட்டு நீக்கிவிடுவேன் என மிரட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் தோற்று போனது.

இதனால் படுடென்ஷனான ப்ரீத்தி ஜிந்தா பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரிடம் சரமாரியாக வாக்குவாதம் செய்துள்ளார்.

வீரர்கள் முன்னிலையில் கடுமையாக திட்டியதுடன் வேலையை விட்டு நீக்கி விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது.

பயிற்சியாளரின் செயல்பாடே தோல்விக்கு காரணம் என கூறியதுடன், நான்கு எழுத்தில் கெட்ட வார்த்தை கூறி அவமானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என ப்ரீத்தி ஜிந்தாவும், சஞ்சய் பாங்கரும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது