பலிக்காது போகும் பசிலின் கனவு!மஹிந்த அணியை ஊக்குவிக்குகிறார் விக்னேஸ்வரன்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பலிக்காது போகும் பசிலின் கனவு!மஹிந்த அணியை ஊக்குவிக்குகிறார் விக்னேஸ்வரன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாசுதேவ நாணயக்காரவின் சம்பந்தியாக இருந்து கொண்டு கூட்டு எதிர்க்கட்சியை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவதாக குற்றசம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டு எதிர்க்கட்சிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் வடக்கு முதல்வர் இனவாதம் பேசி வருவதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை உருவாக்கும் பசில் ராஜபக்சவின் கனவு ஒருபோதும் பலிக்காது.

இந்நிலையில், வட மாகாண முதலமைச்சர் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் இனவாதம் பேசி வருகின்றார். எனவே, வட மாகாண முதலமைச்சர் ஒரு இனவாதி என்பதில் எந்தவித கருத்து முரண்பாடும் கிடையாது.

வடக்கு, கிழக்கை அடுத்து தமிழர்கள் அதிகம் வாழும் மாகாணம் மேல் மாகாணம் ஆகும். இங்கும் நாம் வடக்கு முதல்வர் போன்று இனவாதம் பேசினால் எவ்வாறிருக்கும். எனினும் நாம் அவ்வாறு பேசப்போதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.