பல் வலி எதனால் வருகிறது? உடனே வலி நீங்க இதை செய்யுங்கள்


பல் வலி எதனால் வருகிறது? உடனே வலி நீங்க இதை செய்யுங்கள்

பல் வலி எதனால் வருகிறது? வலி நீங்க என்ன செய்வது? வீட்டு வைத்தியம்

பல் வலி எதனால் வருகிறது? தீராத பல் வலி நீங்க என்ன செய்வது என்பது இன்று நம்மில் பலருக்கு உள்ள கேள்வி

பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. தீராத பல் வலி உங்க தூக்கத்தையும், அன்றாட வேலைகளையும் பாதிக்கக் கூடும்.

எந்த வலி வந்தாலும் வரலாம் ஆனால் பல்வலி மட்டும் வரவே கூடாது என்பார்கள் பல்வலியால் அவதிப்படுபவர்கள்.

எனவே பல்வலிக்கு என்ன செய்வது? பல் வலிக்கு என்ன தீர்வு என்பது பற்றி தற்போது இங்கு பார்ப்போம்.

முதலில் பல்வலி ஏன் வருகிறது என்பது பற்றி அறிந்துகொள்வோம்.

பல் வலி காரணம் என்ன? பல் வலி எதனால் வருகிறது? Causes of Toothache in Tamil

பல் வலிக்கு பல காரணங்கள் உள்ளன. அவை, பற்குழி, காயம், பல் மிளறி அரிப்பு, பற்கள் அரைப்பு, பல் புண், பல் அதிக உணர்திறன், தெறித்த பல், சேதமடைந்த பூச்சு மற்றும் ஈறுகளின் நோய் ஆகும்.

பல்வலிக்கு முக்கிய காரணம் ஒழுங்கான, முறையான பராமரிப்பின்மை தான்.

பல் சுகாதாரமில்லாமல் இருக்கும் பட்சத்தில், பல்சொத்தை, ஈறுகளில் பிரச்சினை போன்றவை எளிதில் ஏற்பட கூடும்.

அதுமட்டுமில்லை. சர்க்கரை வியாதி, குறைப்பிரசவம், பக்கவாதம், இதய நோய்களையும் இது உருவாக்கவல்லது.

பல் வலியின் உண்மையான காரணத்தைத் தீர்மானிக்க ஒரு மருத்துவரை அணுகுவதே உகந்தது. நீங்களாக சுய பரிசோதனை செய்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

பொதுவாக வருடம் ஒரு முறை பல் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.

விதைவகை உணவுகள், முட்டை, தக்காளி, பீன்ஸ், பூண்டு போன்றவை பல்லிற்கு உறுதியை ஏற்படுத்தும்.

தினமும் உண்ணும் உணவில் 5 % சதவீதத்திற்கு மிகாமல் இனிப்புகளை உட்கொள்ள வேண்டாம். இது உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட விஷயம் ஆகும்.

பல் வலிக்கு வீட்டு வைத்தியம்

தீராத பல் வலி நீங்க - 5 நிமிடத்தில் வலி குறைய மருந்து

பல் வலி ஏற்பட்டால் அதனை வீட்டில் இருந்தவாறு எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று இங்கு அலசுவோம். வீட்டில் நாம் அன்றாடம பயன்படுத்தும் சில பொருட்கள் பல் வலியை கட்டுப்பட்ட உதவும்.

பூண்டு

பூண்டில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதால் அது நிறைய வகைகளில் நமக்கு பயன்படுகிறது. இதில் உள்ள அல்சின் என்ற பொருள் ஆன்டி பாக்டீரியா தன்மை வாய்ந்தது.

பூண்டை பயன்படுத்தி பூண்டு டீயோ அல்லது பூண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று வரலாம். பாதிக்கப்பட்ட பல்லில் பூண்டை வைக்கலாம்.

தீராத பல் வலி நீங்க பல் வலி இருக்கும் போது பூண்டு பற்களை நசுக்கி அதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதை அப்படியே வலி உள்ள பற்களில் வையுங்கள். பல் வலி சீக்கிரம் குறைந்து விடும்.

புதினா

அசைவ உணவுகளில் அதிகளவு பயன்படுத்தும் புதினா பல் வலி உடனே குணமாக பயன்படுகிறது. எனவே சிறிதளவு புதினாவை பல் வலி உள்ள இடத்தில் வைத்து நன்றாக மெல்ல வேண்டும். புதினாவின் சாற்றிற்கு பல் வலி பறந்தோடிவிடும்.

இஞ்சி

பொதுவாக பல் வலி பிரச்சனையால் அடிக்கடி அவஸ்த்தை படுபவர்கள் சிறிதளவு இஞ்சி சாறை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளிப்பதன் மூலம் பல் வலி குணமாகும்.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தை அதன் சாறு வெளிவருமாறு இடிக்கவும். அதனை பல் வலி உள்ள இடத்தில் வைக்கவும். இதனால் கிருமிகள் அழியும். பல் வலி நீங்க இதுவும் ஒரு முறை.

பல் வலிக்கு கிராம்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறிது கிராம்பு தேநீர் அல்லது கிராம்பு எண்ணெயை தேய்க்கவும். கிராம்பு எண்ணெய்யுடன் கேரியர் எண்ணெய்யை சேர்த்து பயன்படுத்துங்கள். அல்லது

இரண்டு சிறிய கிராம்புகளை எடுத்துக்கொண்டு அதை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து சிறிது நேரம் நன்றாக கடித்து கொண்டிருந்தால் பல் வலி குணமாகும்.கிராம்பு எண்ணெய்யும் பல் வலி உள்ள இடத்தில தடவலாம்.

உப்பு நீர் வாய் கொப்புளியுங்கள்

வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து வாயை கொப்பளியுங்கள். இதை ஒரு நாளைக்கு 2-3 முறை என மீண்டும் செய்யலாம். இது பல்லில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது.

இந்த தண்ணீரைக் கொண்டு வாயை கொப்பளிக்கும் போது வாயின் இடுக்குகளில் உள்ள குப்பைகள், கிருமிகள் எல்லாம் வெளியேறி விடும்.

இந்த முறை பல் வலி யால் ஏற்படும் வீக்கம், தொண்டை புண் போன்றவற்றை ஆற்ற உதவுகிறது.

பல் வலிக்கு கொய்யா இலை

பல்வலி ஏற்படும் போது 2-3 கொய்யா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். கொய்யா இலைகள் கொழுந்தாக இருந்தால் அப்படியே மென்று சாப்பிடலாம்.

கொய்யா இலைகள் – 8, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவிட்டு, ஒரு டம்ளராக சுண்டியதும் அதை இளஞ்சூடாக்கி வாய் கொப்பளித்தாலும் பல் வலி குறையும்.

தீராத பல் வலி நீங்க என்ன செய்வது? நீங்க மேலும் எளிய வழிகள்

பல் வலிக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வரலாம். சிறிது துணியில் ஐஸ் கட்டிகளை எடுத்து பல்வலி ஏற்படும் இடத்தில் ஒத்தடம் கொடுத்து வரலாம். இது வலியை குறைக்க உதவி செய்யும்.

புதினா எண்ணெய்யை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைக்கலாம் அல்லது வெதுவெதுப்பான புதினா டீ பேக்குகளை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

பற்களை பாதுகாப்பது எப்படி – பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்

சாப்பிட்ட பின்னர் வாயில் எஞ்சி இருக்கும் உணவுத் துகள்களே பாக்டீரியாக்கள் பெருகும் இடங்கள். எனவே, ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்ததும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.

பற்களால் நகத்தைக் கடித்தல், பென்சில் போன்ற பொருட்களைக் கடித்தல், குண்டூசி மற்றும் குச்சியால் பற்களைக் குத்துதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. இவை பற்களில் நோய்த் தொற்றினை ஏற்படுத்திவிடும்.

காலை, இரவு என்று தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம். இரவு படுக்கும்போது உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்துவிட்டுப் படுப்பது பற்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.

  • 3 மாதத்துக்கு ஒருமுறை டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
  • அதிக குளிர்ச்சியான அல்லது அதிக சூடான உணவுகளை உண்ண கூடாது.
  • குழந்தைக்ளுக்கு சாக்லேட்டுகள், ஐஸ் கிரீம்கள் போன்றவற்றை கொடுக்க கூடாது.
  • சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிப்பது அவசியம்.குழந்தைகளுக்கும் கற்று தாருங்கள்.
  • அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்க்கவும்.
  • உடல் நிலை சரில்லையென்றால் டூத் பிரஷை உடனடியாக மாற்றவும்.

Tamil breaking news today – தமிழ் செய்திகள் இன்று