பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கான கட்டணம்


பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கான கட்டணம்

பஸ்களில் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றால் இரண்டு வகையான பஸ் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று கொண்டு செல்லும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருக்கைகளுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்லும் விதிமுறைகளை மீறும் அனைத்து பஸ்களையும் பறிமுதல் செய்யுமாறு கடந்த வாரம் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.

பெரும்பாலான பகுதிகளில் இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனினும் கிராமப்புறங்களில் இந்த விதிமுறை மீறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால், பஸ்களில் நின்று பயணிக்கும் பயணிகளுக்கு தனியான கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலைமையை மதிப்பீடு செய்து இந்த வாரத்துக்குள் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் அமுனுகம மேலும் தெரிவித்தார்.