பாடசாலைகளில் நல்லிணக்க பாடத்தையும் உள்ளடக்க வேண்டும்!ஜனாதிபதி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பாடசாலைகளில் நல்லிணக்க பாடத்தையும் உள்ளடக்க வேண்டும்!ஜனாதிபதி

நாட்டின் பல்கலைக்கழகங்கள், தொழிற் பயிற்சி மத்திய நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களையும் நல்லிணக்க கேந்திர நிலையங்களாக நியமிக்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாடசாலை பாடத்திட்டத்தில் நல்லிணக்க பாடத்தையும் உள்ளடக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியில் தொழிநுட்ப பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

(அத தெரண)