பாடசாலை ஆரம்பம் செய்வது தொடர்பில் வௌியான செய்தி


பாடசாலை ஆரம்பம் செய்வது தொடர்பில் வௌியான செய்தி

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பம் செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகள் நடத்தப்படும் முறை தொடர்பில் இன்று மாகாண மட்டத்தில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்.

அத்துடன் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நேற்றைய வருகை 65 சதவீதமாக பதிவாகியுள்ளது என சுட்டிக்காட்டியுளளார்.

நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள பல அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இணைய வழியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.