பாதாள உலக தலைவர் ஆமி சம்பத் கைது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பாதாள உலக தலைவர் ஆமி சம்பத் கைது

பாதாள உலக குழு உறுப்பினர் ஆமி சம்பத் உட்பட இருவர் கொம்பனி வீதிப் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆமி சம்பத்திடமிருந்து துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸர் தெரிவித்தனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் பணிப்புரையின் படி கைதுசெய்யப்பட்ட இருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக விசேட அதிரடிப் படை கட்டளை அதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் ஜே.கே.ஆர்.ஏ பெரேரா கூறினார்.

தெமட்டகொட சமிந்தா என்ற மற்றொரு பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் சந்தேகநபருக்கு தொடர்பிருப்பது விசாரணைகளில் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

(அத தெரண)