பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வி​ரைவாக நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வி​ரைவாக நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்துள்ள 134,446 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்காக உலர் உணவுகள் உட்பட அனைத்து வசதிகளையும் விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

இன்று (17) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

130 பிரதேச செயலக வலயங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 47,922 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், 08 பேர் உயிரிழந்தும், 08 பேர் காணமல் போயுள்ளதாகவும், 09 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் 68 வீடுகள் முழுமையாகவும், 10,293 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும், 29,004 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

ஜனாதிபதியின் அறிவுரைப்படி உலர் உணவு வழங்குவதற்கான தொகையை 225 ரூபாவாக அதிகரித்திருப்பதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

(அத தெரண)