கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசா விண்ணப்ப மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நேற்று பதிவான பாதுகாப்பு விவகாரம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் ஐவிஎஸ் பிரைவெட் லிமிடெட் உடனான தங்கள் சந்திப்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
விசா விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அவசர தூதரகம் அல்லது விசா விடயத்திற்கு உயர் ஸ்தானிகராலயத்தை 011 232 6921 அல்லது 011 2422860 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.