பாம்பின் தலையை முத்தமிடச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பாம்பின் தலையை முத்தமிடச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

சீனாவில் பெண்ணொருவர் பாம்பின் தலையில் முத்தமிட முயன்றபோது, அந்தப்பாம்பு பெண்ணின் மூக்கை திடீரென்று பாய்ந்து கடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதிர்ஷ்டவசமாக அப்பெண்மணி உயிர் தப்பினார்.

சீனாவின் பூகெட் மாகாணத்தில் அமைந்துள்ள ஜூ மிருகக் காட்சி சாலையில் சுற்றுலாப் பயணிகளை கவர கடந்த சனிக்கிழமை நிறுவனம் ஒன்று பாம்பை வைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளது.

அப்போது அங்கு வந்திருந்த பெண்ணொருவர் பாம்பின் தலையில் முத்த மிட முயன்றார்.

அப்போது, அந்த பாம்பு திடீர் என அவரது மூக்கை கவ்வி பிடித்து கடித்துள்ளது.

உடனடியாக பாம்பிடம் இருந்து அவரை விடுவித்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் காவல்துறையினர் அங்கு சென்று பாம்பு நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு நிகழ்ச்சியை நடத்த தடை விதித்துள்ளனர்.

 

https://youtu.be/eaEfVe9GDPg